ஒரே நாளில் 2,603 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

 
corona death

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 2, 603 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,  20,557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 43,803,619 ஆக உள்ளது. செயலில் உள்ள வழக்குகளைப் பற்றி பேசுகையில், அவற்றின் எண்ணிக்கை 143, 091 ஆகும். 

Corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 18,517 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 11,43, 091பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

corona

உச்சபட்சமாக   கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 2, 603  பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 528, 388 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,04,797 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,00,61,24,684 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. து என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.13% ஆகவும், வாராந்திரகொரோனா பாதிப்பு விகிதம் 4.64% ஆகவும் உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.47%  ஆகவும் பதிவாகி வருகிறது.