கட்சியை கலைத்து விடுவேன், வாக்கு கேட்க வரமாட்டேன்.. மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி

 
ஆட்சியை கலைத்துவிடுவேன்..  - முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை..

விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்கும் திட்டங்களை நான் வழங்கவில்லை என்றால், எனது கட்சியை கலைத்து விடுவேன், வாக்கு கேட்க வரமாட்டேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி விட்டன. கர்நாடக மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை கட்சிகள் அளித்து வருகின்றன. 

காங்கிரஸ்

உதாரணமாக காங்கிரஸ் கட்சி அண்மையில், வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 ஆகிய வாக்குறுதிகளை அளித்தது. இந்நிலையில், கர்நாடகாவில் முக்கிய கட்சிகளில் ஒன்றான, மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி,  விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்கும் திட்டங்களை நான் வழங்கவில்லை என்றால், எனது கட்சியை கலைத்து விடுவேன், வாக்கு கேட்க வரமாட்டேன் என அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மதசார்ப்பற்ற ஜனதா தளம்
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி பேசுகையில் கூறியதாவது: விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்கும் திட்டங்களை நான் வழங்கவில்லை என்றால், எனது கட்சியை கலைத்து விடுவேன், வாக்கு கேட்க வரமாட்டேன். நம் விவசாயிகள் கடனில் மூழ்கி விடக்கூடாது. நிதி திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பேன். இந்த பஞ்சரத்ன ரத யாத்திரையின் மூன்றாவது தீர்மானம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.