ஹைதராபாத் தீ விபத்து - சென்னையை சேர்ந்தவர் உட்பட 8 பேர் பலி!!

 
tn

ஹைதராபாத் அருகே எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை சேர்ந்தவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

tn

ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரூபி ஹோட்டல் கட்டிடத்தின் பாதாள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  இதில் எதிர்பாராத விதமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  கட்டிடத்தின் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தீயில் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஹோட்டலின் பாதாள அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக்கில் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

tn

 தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை அடர்ந்த புகையுடன் பரவியதால் ஹோட்டலில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 8 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்து பலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் ஷோரூம் மேலே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த சீதாராமன் என்ற 48 வயது நபர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.