உத்தரப்பிரதேசத்தில் மே. 4 வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது..

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையும் மே 4ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் விடுப்பில் இருப்பவர்களும் பணிக்கு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எஸ். ஹெச். ஓ, சி. ஓ, மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் வரையிலான அனைத்து நிர்வாக காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையை மே 4ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி விடுப்பில் உள்ளவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து வரவுள்ள பண்டிகையை ஒட்டி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவை கடந்த 16 ஆம் தேதி பிறப்பித்தார். அதன்படி தற்போதுவரை காவலர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. பண்டிகையின்போது அமைதியை நிலைநாட்ட மதத்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அப்போதே முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இன்று மே 1 ம் தேதி ஆக்வீட்ட நிலையில் வருகிற புதன்கிழமை அன்று காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டது முடிவுக்கு வருகிறது