இம்மாச்சலபிரதேச அமைச்சரவை விரிவாக்கம் - முன்னாள் முதலமைச்சரின் மகன் அமைச்சரானார்

 
HP Cabinet

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் இமாச்சலபிரதேச மாநிலத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி அம்மாநிலத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அம்மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,  பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போனது. 

இந்தநிலையில், இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய மந்திரிகளுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் கேபினட் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.