மதுரா நகரம் சுத்தமாக இல்லை.. சொந்த தொகுதியின் நிலையை போட்டுடைத்த பா.ஜ.க. எம்.பி. ஹேம மாலினி

 
தங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூட போராடும் விவசாயிகளுக்கு தெரியாது… பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி

உத்தர பிரதேசததில் மதுரா நகரம் சுத்தமாக இல்லை என மதுரா தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஹேம மாலினி வெளிப்படையாக பேசியுள்ளார்.

உத்தர பிரதேசம் மதுரா நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. ஹேம மாலினி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று  குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ஐஸ்வரியாக கிராமத்தில் நடைபெற்ற புதிய அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசுகையில்  ஹேம மாலினி பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய இடங்களுக்கு யாத்திரை சென்று வந்தேன்.

மதுரா

இந்த யாத்திரையின் போது, பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை தந்ததால் மதுரா போதுமான அளவு சுத்தமாக இல்லை என்பதை கண்டறிந்தேன். பலரின் கற்பனையில் மதுரா மிகவும் சுத்தமான இடம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் மதுராவுக்கு வருகை தருவதும், அங்கு தூய்மையை பேணுவதற்கான வழிமுறையும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே இதற்கு காரணம்.

யோகி

இருப்பினும், நாங்கள் நிறைய முயற்சி செய்து அதை நன்றாக பராமரித்துள்ளோம். மதுரா உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு புனித யாத்திரை மையமாக உள்ளது. நான் மதுராவிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல விஷயங்களை மாற்ற முயற்சித்து வருகிறேன். எங்கள் முதல்வர் யோகி  ஆதித்யநாத் ஜி நிறைய உதவுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.