வணக்கம் தமிழ்நாடு! மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் - பிரதமர் மோடி

 
m

 திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.   இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமான மூலம் இன்று பிற்பகல்  மதுரை வந்தார்.   மதுரையில் பாஜகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.  அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அவர் காந்திகிராமம் சென்றார். காந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இறங்கினார்.

m

திண்டுக்கல்லில் பிரதமரை நேரில் வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்,  பிரதமருக்கு  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களைக் கொண்ட ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கினார்.  

modi

காந்தி கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின்னர் அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்தனர் .  சாலையில் கூடி உற்சாக குரல் எழுப்பிய பொதுமக்களை பார்த்தவுடன் காரில் இருந்து வெளியே வந்து கூடியிருந்த மக்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார் பிரதமர் மோடி.

mo

வரவேற்புக்கு  பின்னர் காந்தி கிராமத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி . முதல்வர் மு .க. ஸ்டாலின்,  ஆளுநர் ஆர்.என். ரவி,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்வதாக திட்டம்.   ஆனால், வானிலை சரியாக இல்லாததால் திட்டமிட்டு இருந்தபடி அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்யாமல் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.

mm

 தனது திண்டுக்கல் பயணம்  குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,   ‘’வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்.’’ என்று பதிவிட்டுள்ளார்.