11 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமை ஆசிரியர்! ஆசைக்கு இணங்காவிட்டால் டிசி!!

 
rape

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பங்காருபாளயம் மண்டலம் சில்லகுண்டபள்ளேயில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்  தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அபு (58). இவர் இப்பள்ளியில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும்  11 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

Teacher accused of sexually assaulting students in Chittoor school - News  Meter English | DailyHunt

மாணவிகளிடம் தனது பாலியியல் சீண்டல்  குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் ஒரு கயிற்றில் சாக் பீசை கட்டி தாலி கட்டுவேன் என்றும்  அவர்களை டார்ச்சர் செய்து பள்ளியில் இருந்து டி.சி. வழங்கிவிடுவேன் எனவும்  மிரட்டி வந்துள்ளார். இதனால் பல மாணவிகள் வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில் தலைமை ஆசிரியர் அபு தொல்லை தாங்க முடியாத மாணவி ஒருவர் பெற்றோரிடம் கூறியதையடுத்து, ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து மண்டல பரிஷத் உறுப்பினர் இந்துசேகர் , தலைவர்  தீபா ஆகியோர் மூலம் பெற்றோர் கலெக்டர் ஹரிநாராயணனிடம் புகார் அளித்தனர். 

உடனடியாக  சித்தூர் ஆர்டிஓ ரேணுகா, டிஇஓ புருஷோத்தம், எம்இஓ நாகேஸ்வரராவ், தாசில்தார் சுசீலாம்மா, எம்பிடிஓ வித்யாராமன் ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் தனி தனியாக தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு தெரிந்து கொண்டனர். மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் உடனடியாகப்  டிஇஓ, தலைமை ஆசிரியர் அபுவை சஸ்பெண்ட் செய்ததாக அறிவித்தார். மேலும் ​​வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யுமாறு போலீஸாருக்கு ஆர்டிஓ உத்தரவிட்டார்.  இதையடுத்து பலமனேர் டிஎஸ்பி கங்கையா தலைமையிலான போலீசார் தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியர் அபுவை தேடி வருகின்றனர்.