இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இணைவது சாத்தியம்.. ஹரியானா பா.ஜ.க. முதல்வர்

 
பாகிஸ்தான்

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒன்றிணையும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இணைவதும் சாத்தியமாகும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் பா.ஜ.க.வின் தேசிய சிறுபான்மை பிரிவின் 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் தொடக்க விழாவில் அம்மாநில முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டார். அந்த விழாவில் மனோகர் லால் கட்டார் பேசுகையில் கூறியதாவது: கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒன்றிணையும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இணைவதும் சாத்தியமாகும். 

அதிகாரி பேசிய வார்த்தைகள் தவறுதான்.. ஆனால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கண்டிப்பு அவசியம்.. முதல்வர் மனோகர் லால் கட்டார்

நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல, ஆனால் இது (மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைப்பு) 1991ல் நடந்தது, மக்கள் அந்த (பெர்லின்) சுவரை உடைத்தனர். 1947ல் நாட்டை (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை) பிரித்தது வலிக்குரியது. காங்கிரஸில் உள்ள சிலர் ஆட்சியை பிடிக்க அவசரப்படாவிட்டால் பிரிவினை நடந்திருக்காது. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது. 

காங்கிரஸ்

சுதந்திரத்திற்கு பிறகு சிறுபான்மையினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தியது. சிறுபான்மையினரிடையே சங்கத்தின் மீதான பயத்தை காட்டி பாதுகாப்பற்ற உணர்வை காங்கிரஸ் ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், சிறுபான்மையினர் இப்போது காங்கிரஸின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்கள் பா.ஜ.க.வின் செயல்களையும், வார்த்தைகளையும் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.