வெப்பத்தின் தாக்கம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!!

 
tn

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் துன்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கி வைத்தது.  பல மாநிலங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.  வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க மக்கள் கோடை விடுமுறையாக பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதைப்போல் கோடை காலத்தில் சரும பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும்

summer

இந்நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒவ்வொரு கோடை காலத்திற்கு முன்பு மாநிலங்களுக்கு வழக்கமாக அனுப்புவது போல வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு ,சோர்வு ,மயக்கம் போன்ற பாதிப்புகளை சமாளிப்பதே இதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.   வெப்பத்தின் தாக்கம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை இதன் மூலம் குறைக்கலாம் என்றும் இதன் காரணமாக  அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பரப்ப வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

rajesh bhushan

குறிப்பாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்,  குளிரூட்டும் சாதனங்கள் இயக்க தடையற்ற மின்சாரம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும்,  சோலார் தகடுகளை நிறுவவேண்டும்,  உட்புற வெப்பநிலையை குறைக்க குளிரூட்டும் கூரைகள்,  ஜன்னல் மறைப்புகள்  ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த அத்தியாவசிய மருந்துகள் ஐ.பி. திரவம் உள்ளிட்ட தேவையான சாதனங்கள் போதிய அளவில் கையிருப்பில் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.