சிறுமிகள் மடாதிபதியால் பாலியல் வன்கொடுமை.. பேசினால் வாக்குகளை இழக்க நேரிடும் என கட்சிகளுக்கு பயம்.. விஸ்வநாத் தாக்கு

 
மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணர்

மடாதிபதி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை குறித்து பேசினால் வாக்குகளை இழக்க நேரிடும் என கட்சிகளுக்கு பயம் என்று பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் பா.ஜ.க. மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கடுமையாக தாக்கினார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அங்கிருந்து மீட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி உள்பட 5 பேருக்கு எதிராக போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

எச்.விஸ்வநாத்

மடாதிபதி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தனது கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதை அந்த கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கடுமையாக தாக்கினார். மடாதிபதி விவாரகம் தொடர்பாக கர்நாடக பா.ஜ.க. மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கூறியதாவது: மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு வெட்கம் இருந்தால் அந்த மடாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத சித்ரதுர்கா எஸ்.பி.யை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 

மோடி

மைனர் பெண்களின் பாதுகாப்பு கோரி பிரதமர் மோடிக்கு அனைத்து உள்ளீடுகளுடன் விரிவான கடிதம் எழுதுவேன். இந்த பிரச்சினையில் யாரும் வாய் திறப்பதில்லை. எல்லாவற்றையும் அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள். இதை பற்றி பேசினால் வாக்குகளை இழக்க நேரிடும் என்று கட்சிகளுக்கு பயம். எல்லாம் வாக்கு வங்கி அரசியல். ஓட்டுக்காக மைனர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆதரிக்கிறீர்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.