காதலை ஏற்க மறுத்த மாணவியை நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு!

 
lover

ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்தாண்டு சுதந்திர தினம் அன்று பிடெக் மனைவியை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

High Court returns to Guntur after 62 years- The New Indian Express

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்த மாணவி ரம்யா. ரம்யாவுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சசிகிருஷ்ணா என்ற இளைஞர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த நிலையில், அவரது காதலை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். அதனை ரம்யா ஏற்க மறுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட 15 ம் தேதி சுதந்திர தினம் அன்று  ரம்யா வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் டிபன் வாங்குவதற்காக ரம்யா சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சசிகிருஷ்ணா மீண்டும் தனது காதலை ஏற்க வேண்டும் என ரம்யாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

இவர்களுக்கிடையே சுமார் 8 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் ரம்யா சசி கிருஷ்ணாவின் பேச்சை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் சசி கிருஷ்ணா ஏற்கனவே திட்டமிட்டு கொண்டுவந்த கத்தியால் ரம்யாவின் கழுத்து, வயிறு என உடலில் 9 இடங்களில் கண்மூடித்தனமாக குத்தி அங்கிருந்த மக்களையும் கத்தியை காண்பித்து மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். உடலில் அதிக ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தினர். 

கொலை செய்த சசி கிருஷ்ணாவை கைது செய்து உரிய ஆதாரங்களுடன் 36 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சுமார்  9 மாதங்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் குண்டூர்  4வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராம்கோபால் விசாரணையை முடித்து இன்று தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் சசி கிருஷ்ணா வேண்டும் என்று திட்டமிட்டு ரம்யாவை நடுரோட்டில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால் சசிகிருஷ்ணாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்ததாக இருக்கும் என வழக்கறிஞர்கள்,  மகளிர் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.