குஜராத் கலவர வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு..

 
குஜராத் கலவர வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு..

2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத்  தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது 17 பேரை எடுத்துக்கொல்லப்பட்ட  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

குஜராத் கலவர வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு..

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்  59 பேர் கொல்லப்பட்ட நிலையில் , இதனை அடுத்து  அம்மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பரவலாக வன்முறைகள் அரங்கேறின.  2002 மார்ச் 1ம் தேதி கோத்ராவில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்ச் மஹால் மாவட்டத்தின் டிலோஸ்  என்கிற கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் சிறுபான்மையின சமூகத்தினரின் வீடுகளை வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து எரித்தது.  இந்த விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். கலவரம்  நிகழ்த்தப்பட்டு 20 மாதங்கள் கடந்த பிறகே  குஜராத் காவல்துறை எஃப் ஐ ஆர் பதிவு செய்து.  அதன் அடிப்படையில் 22 பேரையும் கைது செய்தது.

குஜராத் கலவர வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு..

 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களை அதே ஆண்டே  குஜராத் உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துவிட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்தே குற்றவாளிகள் 22 பேரும் பிணையில் இருந்தபடியே விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.  இந்நிலையில் போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி 17 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து ஹலோன்  நகர செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விசாரணை நடைபெற்று வந்த 18 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரில் 8 பேர் உயிரிழந்து வீட்டனர். மீதமுள்ள 17 பேரையும் நீதிமன்றம் தற்போது  விடுதலை செய்துள்ளது. எரித்துக்கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டது.  இந்த வழக்கில் இணைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சியங்களும் , பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்.  இதுவே குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.