குஜராத்: கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு!

 
tn

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tn

இந்தியாவில் மதுவிலக்கு என்பது சில மாநிலங்களிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . அந்த வகையில் குஜராத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மதுவிலக்கு என்பது அமலில் உள்ளது.  குஜராத்தில் 1949 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தாலும்,  குஜராத் தனி மாநிலமாக உருவான 1960 இல் இருந்து அங்கு மதுவிலக்கு சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Death

இந்நிலையில் குஜராத் மாநிலம் பொடாட் அகமதாபாத் மாவட்டங்களில் கள்ள சாராயம் அருந்திய 10ற்கும் மேற்பட்டோர் நேற்று தண்டுகா மற்றும் பொடாட் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 18 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.  சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.