சுங்கச்சாவடி ஊழியரிடம் கிரேட் காலி வாக்குவாதம் - வீடியோ வைரல்

 
great khali

பிரபல WWE விளையாட்டு வீரரான கிரேட் காலி சுங்க சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காளி பிரபல மல்யுத்த விளையாட்டான WWE மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் பலரும் தி கிரேட் காளி என்ற அடைமொழியுடன் இவரை அழைக்கின்றனர். கிரேட் காலி பஞ்சாப் மாநில காவல்துறையிலும் பணியாற்றியுள்ளார். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநில பாஜகவில் இணைந்த கிரேட் காலி, நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டார். 


இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சுங்கசாவடி ஊழியருடன் கிரேட் காலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாபில் உள்ள சுங்கசாவடி ஒன்றை கிரேட் காலி கடந்து செல்ல முற்பட்ட போது அவரிடம் சுங்கச்சாவடி ஊழியர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரேட் காலி சுங்கச்சாவடி ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சுங்கச்சாவடி ஊழியரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. பிரபல WWE விளையாட்டு வீரரான கிரேட் காலி சுங்க சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.