மே.வ. ஆளுநர்-சி.வி. ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு

 
b

மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் இன்று பதவியேற்கிறார்.  

 மேற்கு வங்காளத்தின் ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.  இந்த நிலையில் புதிய ஆளுநராக .சிவி. ஆனந்த போஸ்-ஐ நியமனம் செய்து அறிவித்திருந்தார் ஜனாதிபதி திரௌபதி  முர்மு.

 b

இது குறித்து ஜனாதி மாளிகை செய்தி தொடர்பாளர் அஜய் குமார் சிங் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்,  மேற்கு வங்காளத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி. வி .ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

 ஆனந்த போஸ் இன்று பதவி ஏற்க உள்ளார்.   கேரளாவைச் சேர்ந்த ஆனந்த போஸ் மேகாலயா மாநில அரசின் ஆலோசராக இருந்தார்.  மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஆனந்த் மாவட்ட ஆட்சியர் ,மாநில தலைமைச் செயலாளர் , மத்திய அரசின் செயலாளர்,  ஐநா அதிகாரி என்று பல்வேறு உயர் பதவிகளை வைத்து வந்திருக்கிறார்.