கேரள அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களின் ஓய்வூதிய ஒப்பந்த விவகாரம்.. கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி

 
ஆரிப் முகமது கான்

கேரள அமைச்சரவையின் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய ஒப்பந்தம்  தொடர்பாக அம்மாநில ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அம்மாநில கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளர். கடந்த சில மாதங்களாக கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், பிரனாயி விஜயன் தலைமையிலான அரசாங்கத்துக்கும் பல்வேறு விவகாங்கரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், கேரளாவில் அரசு பல்கலைக்கழங்களின் 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யும்படி கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டார். 

பினராயி விஜயன்

இது  பினராயி விஜயன் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானும் இடையிலான மோதலை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தற்போது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாாகள். இரண்டு ஆண்டு சேவைக்கு பிறகு அவர்கள் ஓய்வூதியம் பெறத தகுதியடைகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.8,300ம், 5 ஆண்டுகளுக்கு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.21,000ம் ஓய்வூதியமாக பெறுகிறார்கள்.

ஓய்வூதியம்

அமைச்சரவையின் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய ஒப்பந்தம்  தொடர்பாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:  ஒவ்வொரு அமைச்சரும் சுமார் 25 ஊழியர்களை தனிப் பணியாளர்களாக நியமிக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இது ஒரு மோசடி. இருப்பினும், இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று நான் கோர முடியாது. ஆனால் இந்த விவகாரம் விரைவில் தேசிய அளவில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.