நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

 
naatu-kothu-3

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுப் பாடல் கோல்டன் குலோப் கிருதை வென்றுள்ளது. கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருதை தட்டி சென்றுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ,ஆலியா பட் ,ஸ்ரேயா சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் ஆர் ஆர் ஆர். தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் ரூ.1150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

rrr

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆர்ஆர்ஆர் படம் நாமினேஷனில் இடம் பிடித்திருந்தது . இப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும்,  நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.  


இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ராஜமவுலி ,ஜூனியர் என்டிஆர் ,ராம்சரண் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் விருது அறிவிக்கப்பட்டவுடன் எழுந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார்.ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் கிலோப் விருதை தட்டி சென்றுள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . ஏற்கனவே ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் கோல்டன் குளோப் விருதை  தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.