மோடியே திரும்பி போ -தேசிய அளவில் டிரெண்ட் #Go_Back_Modi

 
mo

மோடியே திரும்பி போ #Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.   பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் குஜராத் சென்று தொங்கு பால விபத்து பகுதிகளை பார்வையிடுகிறார்.  இதை முன்னிட்டு இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.


 குஜராத் மாநிலத்தில் 150 ஆண்டுகள் பழமையான தொங்கும் கேபிள் பாலம் உள்ளது.  அண்மையில் இந்த பாலத்தை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 26 ஆம் தேதி இந்தப் பாலம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில்,  குஜராத்தி புது வருட தொடக்க நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தில் கூடியிருக்கிறார்கள்.


 சுமை தாங்க முடியாமல் திடீரென்று பாடம் இடிந்து விழுந்ததில் பெண்கள் ,குழந்தைகள், ஆண்கள் என்று நூற்றுக்கணக்கானோர் ஆற்றுக்குள்  விழுந்தார்கள்.  தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை,  ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த தொங்கும் பாலம் விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 


 இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கலும்,  உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியும் அறிவித்துள்ள பிரதமர் மோடி,  விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று செல்கிறார்.  இந்த நிலையில் மோடியே திரும்பி போ என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றன.   தொங்கும் பாலத்தை குறிப்பிட்டு இதுதான் குஜராத் மாடலா என்று விமர்சித்து வருகின்றனர்.