காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து சாத்தியமில்லாதது.. உண்மையை போட்டுடைத்த குலாம் நபி ஆசாத்

 
குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்பது சாத்தியமில்லாதது அதனால்தான் எனது புதிய அரசியல் செயல்திட்டத்தில் அது இடம் பெறவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று  வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா நகரில் உள்ள டாக் பங்களாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசுகையில் கூறியதாவது: காஷ்மீருக்கு முன்பு சிறப்பு அந்தஸ்து அளித்த பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டுமானால், அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக மக்களவையில் 350 வாக்குகளும், மாநிலங்களவையில் 175 வாக்குகளும் தேவைப்படும். இது எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அல்லது பெற முடியாத எண்ணிக்கை. 

காங்கிரஸ்

காங்கிரஸ் 50 இடங்களுக்குள் சுருங்கி விட்டது. சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்பதாக அவர்கள் பேசினால், அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் என்று அர்த்தம். பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாததால், எனது புதிய அரசியல் செயல்திட்டத்தில் 370வது பிரிவை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கவில்லை. மாறாக மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது ஆகியவை செயல்திட்டத்தில் அடங்கும். ஏனெனில் இவை அடையக்கூடிய நோக்கங்களாகும். 

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

உள்துறை அமைச்சர் கொண்டு வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக சில என்னை குற்றம் சாட்டினர். ஆனால் நான் ரத்து செய்வதற்கு எதிராக வாக்களித்தேன். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாத அவர்கள், 370வது சட்டப்பிரிவுக்கு எதிராக வாக்களித்தேன் என்று கூறுகிறார்கள். என்னுடன் நின்று எனது புதிய கட்சியின் அடித்தளமாக இருக்கும் எனது சகாக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இது கடவுள் விரும்பினால், அடுத்த 10 நாட்களுக்குள் புதிய கட்சி அறிவிக்கப்படும். என் பெயர் போல் எனது புதிய கட்சி ஆசாத் (சுதந்திரம்) அதன் சித்தாந்தத்திலும், சிந்தனையிலும் இருக்கும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.