பாஜக அரசை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு!

 
tn

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சி.பி. முகமது பஷீர் ,தேசிய தலைவர் சலாம் ,தேசிய பொதுச்செயலாளர் நஜ்முதீன் ,தேசிய செயற்குழு உறுப்பினர் உட்பட 15-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். 

சோதனை

தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரின் சோதனையின் அடிப்படையில்  45 பேர் கைது செய்துள்ளனர். அதில் 19 பேர் கேரளாவிலும், 11 பேர் தமிழ்நாட்டிலும், ஏழு பேர் கர்நாடகாவிலும் ,நான்கு பேர் ஆந்திராவிலும், இரண்டு பேர் ராஜஸ்தானிலும், ஒருவர் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'வின் 100+ நிர்வாகிகள் கைது - 'மெகா'  சோதனையில் நடந்தது என்ன? | National Level Raid in PFI Office - hindutamil.in

இந்நிலையில் பாஜக அரசின் இந்த பழிவாங்கும் நோக்கத்தை கண்டித்து கேரளாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு கொடுத்துள்ளது.