#BREAKING 18-59 வயதுக்குட்பட்டோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி!!

 
vaccine

18 - 59 வயதினருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

corona vaccine

இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில்  20,139  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரத்து 989 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல்  கொரோனா பலி எண்ணிக்கை 5,25,557   ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 199.27   கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

vaccine

இந்நிலையில் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியாவில் 75 நாட்கள் 18 வயது முதல் 59 வயது உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் வருகிற  செப்டம்பர் 28ஆம் தேதி வரை மொத்தம் 75 நாட்கள் வரை 18 வயது முதல் 59 வயது உட்பட்டவர்கள்  பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் 60 வயது நிரம்பிய முதியவர்கள்,  முன்கள  பணியாளர்கள் அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட வந்த நிலையில்,  18 வயது முதல் 59 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து செலுத்த வேண்டிய சூழலில் இருந்தது.  ஆனால் தற்போது பூஸ்டர் தடுப்பூசி 18 வயது முதல் 59 வயது உட்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.