குடும்ப கட்டுப்பாடு செய்த நான்கு பெண்கள் மரணம்

 
w

குடும்ப கட்டுப்பாடு செய்துள்ள நான்கு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்.  தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாமில் கலந்து கொண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட 34 பெண்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 

 கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நடந்த கருத்தடை முகாமில் கலந்து கொண்ட பெண்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.    இந்த முகாமில் டபுள் பஞ்சர் லேப்ராஸ்கோபி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.   மருத்துவர்களின் அலட்சியத்தால் நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

x

 இந்த சம்பவம் குறித்து பொது சுகாதார துறை மாநில இயக்குநர் தலைமையில் விரிவான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.  அவர் விரிவான விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரைப்பை குடல் அழற்சி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.  ஆனாலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் மேற்கொண்டு எதையும் சொல்ல முடியும் என்று சொல்லி இருக்கிறார்.   அன்று மொத்தம் 34 பெண்களுக்கு கர்த்தடை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து அந்த 34 பேரில்  நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதால்,   மற்ற 30 பெண்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது மருத்துவர்கள் குழு.   அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் என்று தெரிய வந்திருக்கிறது. 

இதற்கிடையில் உயிரிழந்த பெண்களின் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை அரசு ஏற்று கொண்டிருக்கிறது.