தூக்கில் போட்டு வளர்ப்பு நாயை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்!

 
Four booked for hanging pet dog in Ghaziabad

வளர்ப்பு நாயை தூக்கில் போட்டு கொடூரமாக கொன்ற இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகிலுள்ள ட்ரோவிகா நகரின் எலைச்சிப்பூரில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை சங்கிலியால் தொங்கவிட்டு கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில், 3 மாதங்களுக்கு முன்பு நாயை கொன்றதாக அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாய் நோய்வாய் பட்டதால் கொன்றாக கூறுகிறார்கள் ஆனால் அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை, அதே நேரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் பலரும் கடும் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.