டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் மரணம்

 
t

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.   அப்போது சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.   இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

s

  இந்த கார் பயணத்தில் சைரஸ் மிஸ்திரியுடன் பயணித்த கார் டிரைவர் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   விபத்தில் உயிரிழந்த மிஸ்திரியின் உடல் குஜராத்தில் இருக்கும் காசா கிராமப்புற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.    சைரஸ் மிஸ்திரிக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரைக்கும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்தார் சைரஸ் மிஸ்திரி. 2012 ஆம் ஆண்டில் ரத்தன் டாடா பதவி விலகிய வின்னர் டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்த சைரஸ் மிஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் என்கிற அடிப்படையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.   மிஸ்திரியின் தந்தை கட்டுமான தொழிலதிபர் ஆவார்.  2016 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அன்று டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரியை நீக்க வாக்களிக்கப்பட்டது.   இதை அடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.