புதுச்சேரி கொலை நகரமாக மாறியுள்ளது - நாராயணசாமி குற்றச்சாட்டு

 
Narayanasamy

புதுச்சேரி கொலை நகரமாக மாறியுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாகவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 
 
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. இது நீடிக்காது. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சாவர்க்கர் தியாகி என்றும், அவருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தயார் என கூறியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் சாவர்க்கரின் சுயசரிதையை படிக்க வேண்டும். சரித்திரத்தை மாற்ற பா.ஜ.க.முயல்கிறது. அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றவில்லை. தினசரி கொலை நடக்கிறது. புதுச்சேரி கொலை நகரமாக மாறி உள்ளது. மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. இதேநிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக்குறியாகி, பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.