தீக்குளித்த சாமியார் உயிரிழப்பு - கிருஷ்ணர் விளையாடிய இடத்தை மீட்க நடந்த போராட்டம்

 
v

இது கிருஷ்ணர் விளையாடிய இடம் என்று அந்த இடத்தை மீட்கும் போராட்டத்தில் தீக்குளித்த சாமியார் உயிரிழந்தார்.  550 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த சாமியார் திடீரென்று தீக்குளித்த உயிரிழந்தார்.  அவரின் உடல் மதுராவில் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.   சட்டவிரோத சுரங்கங்களை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த சாமியார் உயிரிழந்தது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

vr

 ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் போர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.   இந்த சட்ட விரோத சுரங்கங்களில் இருந்து கனிமங்கள் மற்றும் மணல் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.   இந்த சட்ட விரோத சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அமைந்திருக்கும் பகுதி இந்து மத கடவுள் கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதி என்றும், அதனால் இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்ட விரோத சுரங்கங்களை மூட வேண்டும் என்றும்  கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் விஜய் ராகவ் தாஸ் என்கிற சாமியார் பசுபா கிராமத்தில் போராட்டத்தை தொடங்கினார் .

nr

550 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சாமியார் கடந்த 20ஆம் தேதி அன்று அதிகாரிகள் முன்னிலையில், இது  இந்து மத கடவுள் கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதி.  இங்கு சட்டவிரோத சுரங்கங்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்தார்.   உடனே அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும்  போலீசார் சாமியார் விஜய் ராகவ தாசை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.  

das

 தீக்காயங்களுடன் ராஜஸ்தானில் உள்ள சப்தர் பஞ்ச் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி அனுமதிக்க பட்டிருந்த சாமியார் விஜய் ராகவ தாஸ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

 உயிரிழந்த சாமியார் விஜய் ராகவ தாஸின் உடல் அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் இருக்கும் பர்சானா பகுதியில் நேற்று தகனம் செய்யப்பட்டிருக்கிறது.