டெக்கான் ஸ்போர்ட்ஸ் ஸ்டோரில் திடீர் தீ விபத்து! 2 தளங்கள் இடிந்து விழுந்தன

 
fire

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மின் கசிவு காரணமாக டெக்கான் ஸ்போர்ட்ஸ் ஸ்டோரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Deccan Night Wear store at Nallagutta in Secunderabad under Ramgopalpet police station limits

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ராம்கோபால்பேட்டில்  ஜாவீத் மற்றும் ரஹீம் ஆகிய  சகோதரர்கள் டெக்கான் ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு பொருட்கள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகின்றனர். இந்த ஷோரூமில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய   மிதிலேஷ், ரூபேஷ், பூபேஷ், ராம் ராஜ் சிங் ஆகிய 4 ஊழியர்களை மீட்பு படையினர் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். மேலும் கடையில் பணிபுரியும் வாசிம், ஜாஹீர் ஆகிய 2 தொழிலாளர்கள் தீயில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டத்தால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. அடர் புகையால் அங்கிருந்த மக்களுக்கு மூச்சு திணறல்  ஏற்பட்டது. இரண்டு தீயணைப்பு வீரர்கள் புகையில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கட்டிடம் அமைந்துள்ள சாலையை போலீசார்  தடுப்பு வேலிகளால் அடைத்து யாரும் அருகில் வராமல் தடுத்து நிறுத்தினர். 22 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு  தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.  இந்த தீ விபத்தால் 4 மாடி கட்டிடத்தில் 3, 4 வது தளங்கள் இடிந்து விழுந்தன. படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து மீதமுள்ள கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளை அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் கிம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளதால், மருத்துவமனையைச் சுற்றிலும் அடர்ந்த புகை மூட்டமாக இருந்தது.  இதனால், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தில் உள்ள வெப்பம் குறைந்த பிறகு உள்ளே எத்தனை பேர்  சிக்கி கொண்டார்கள் அவர்கள் நிலை என்ன என்பது குறித்து தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.