எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து!!

 
tn

மும்பையில் உள்ள எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.  இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனமான எல்ஐசி இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது.

tn

இந்நிலையில் மும்பையில் உள்ள எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மாடி அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  8  தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள்,  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து தற்போது தீ  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 


லக்ட்ரிக் வயரிங் , கணினிகள்,கோப்பு  பதிவுகள் , மர சாமான்கள் போன்றவற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது என்றும் இதுவரை காயங்களோ  உயிரிழப்புகளை ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.