நீரில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்! பதைபதைக்க வைக்கும் காட்சி

 
flood

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. கனமழையின் காரணமாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

குளம் குட்டைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. துமகூரு மாவட்டத்தில் கெரே குடி கிராமத்தில் உள்ள கொள்ளூ ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீரில் குளித்து விளையாடுவதற்காக பொதுமக்கள் பலர் அங்கு கூடி வருகின்றனர். இன்று காலை தந்தை தனது சிறிய வயது மகனுடன் ஏரி நீர் வெளியேற்றத்தில் குளித்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். செல்பி எடுப்பதற்காக மகனை பின்னால் நிற்க வைத்த நிலையில் திடீரென வெள்ளத்தில் மகன் இழுத்து செல்லப்பட்டது. அவனை பின்தொடர்ந்த தந்தையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக கிராம மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.