பண்டிட்டுகள் கொலை.. வரும் நாட்களில் காஷ்மீர் 100 சதவீதம் இந்துக்கள் இல்லாததாக மாறக்கூடும்... பரூக் அப்துல்லா எச்சரிக்கை

 
இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா

காஷ்மீரி பண்டிட்டுகள் கொலைகள் விவகாரத்தில் விரைவில் எதையும் செய்ய தவறினால் வரும் நாட்களில் காஷ்மீர் 100 சதவீதம் இந்துக்கள் இல்லாததாக மாறக்கூடும் என்று மத்திய அரசை பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து இலக்கு கொலைகள் நடந்து வருகின்றன. பலியானவர்களில் பலர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது காஷ்மீரி பண்டிட்கள். அண்மையில் சௌத்ரிகுண்ட் பகுதியில் புரான் கிரிஷன் பட் என்பவர் கொல்லப்பட்டதையடுத்து, தெற்கு காஷ்மீரின் சோபியானிலி இருந்து 10 காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் காலி செய்து சென்று விட்டதாக தகவல். 

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் கொலைகள் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காஷ்மீர் இந்துக்கள் இல்லாததாக மாறக்கூடும் என்று பரூக் அப்துல்லா எச்சரிக்கை செய்துள்ளார். காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த விவகாரத்தில் (காஷ்மீரி பண்டிட்டுகள் கொலை) உடனடியாக எதுவும் செய்யாவிட்டால் வரும் நாட்களில் காஷ்மீர் 100 சதவீதம் இந்துக்கள் இல்லாததாக மாறக்கூடும். 

அமித் ஷா, மோடி

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு 1990ம் ஆண்டு போன்ற நிலைமைகள் திரும்பியுள்ளன. கொலைகளுக்கு நான் பொறுப்பல்ல. நான் பயங்கரவாத்திற்கு ஆதரவான எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. பிரதமர் மோடியும்,  அமித் ஷாவும் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டும். அதேநேரத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் இலக்கு கொலைகள் மற்றும் சிறுபான்மை இந்துக்களின் வெளியேற்றம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.