ரசிகை பாலியல் பலாத்காரம் -நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட்

 
s

17 வயது ரசிகை தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கொடுத்த புகாரை அடுத்து நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 நேபாள நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன் சந்தீப் லமிச்சானே சுழற்பந்து வீச்சாளரான சந்தீப்,  கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  

la

இந்த நிலையில் சந்தீப் மீத் போலீசில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார் .  அவர் அளித்துள்ள புகாரில் ,  நான் சந்திப்பின் தீவிர ரசிகை .  அவருடன் வாட்ஸ் அப்,  ஸ்னாப் ஷாட் சமூக வலைத்தளங்கள் மூலம் பேசி வந்தேன்.  என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.  நானும் ஆவலுடன் அவரை நேரில் சந்தித்தேன்.  ஆனால்,  என்னை இரண்டு முறை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.

 இது குறித்து காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியின் காவல்துறை உயரதிகாரி ரவீந்திர பிரசாத் தனூக்,   இது போன்ற சம்பவங்களில் போலீசார் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள்.  அப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   சிறுமிக்கு சுகாதார பரிசோதனை நடத்தியிருக்கிறோம்.   அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவாகி இருக்கிறது.   விசாரணையும் தொடர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.  

 ஆனால் புகாரின் படி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.   17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதிவானதை அடுத்து இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில் நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லச்சானை கைது செய்ய இன்று வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது .   இதனால் சந்தீப் லமிச்சானே கைது செய்யப்படுவார் என்று நேபாளத்தில் பரபரப்பு எழுந்திருக்கிறது.