பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பங்களா மர்ம நபர்களால் சூறை

 
ச

 பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது மர்ம நபர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் ஒரு கண் பார்வை இழந்தார். அவரின் ஒரு கை செயல் இழந்தது.  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.   இந்த நிலையில் ஹிமாச்சாரப் பிரதேசத்தில் உள்ள அவரது வீடு மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது.

 இமாச்சலப் பிரதேசத்தில் சோலன் பகுதியில் உள்ளது சல்மான் ருஷ்டிக்கு சொந்தமான அனீஸ் வில்லா என்கிற பங்களா.   ராஜேஷ் திரிபாதி என்பவர் இந்த பங்களாவை பராமரித்து வருகிறார்.   இந்த நிலையில் நேற்று ராஜேஷ் திரிபாதி,  சல்மான் ருஷ்டியின் குடும்ப நண்பர்கள் ராணி சங்கரதாஸ், அவரது மகன் அனிருத்தா சங்கர் தாஸ் ஆகியார் பங்களாவில் இருந்து உள்ளனர்.   அப்போது மதியம் ஒரு மணி அளவில் கோவிந்த் ராம் என்கிற நபரும் அந்த நபரின் மகனும் மேலும் சிலரும் அந்த பங்களாவில் நுழைந்து சூறையாடி இருக்கிறார்கள். 

ச்ல்

 இது குறித்து ராஜேஸ்திரிபாதி போலீசில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் சோலன் காவல் ஆணையர் அஜய்குமார் ராணா,  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  வீட்டில் இருந்த கதவுகள் கண்ணாடிகள் சுத்தியலால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.  போலீசார்  சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தேடி வருகின்றனர்.

மும்பையில் பிறந்த இஸ்லாமியர் சல்மான் ருஷ்டி.  இவர் சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டில் குடியேறினார்.   பிரபல எழுத்தாளராக உருவெடுத்த இவர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.   இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட THE SATANIC VERSES என்ற நாவல் தான் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. 

 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்பட்ட அந்த நாவலுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன.  1989 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சல்மான் ருஷ்டியின் நாவல் பிரதிகள் இங்கிலாந்தில் தீ வைத்து எரிக்கப்பட்டன.  ஆனால்,  அதே ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் புத்தகம் வெளியிடப்பட்டது.  உடனே அமெரிக்க கலாச்சார மையத்தில் தாக்குதல் நடந்தது . இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர் .

சல்மான் ருஷ்டியை கொல்ல ஈரான் மன்னர் அயதுல்லா ஆணை வெளியிட்டார்.    பின்னர் 1991இல் சல்மான் ருஷ்டியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கொலை செய்யப்பட்டார்.  இத்தாலிய மொழிபெயர்ப்பாளரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   இதற்கு அடுத்த ஆண்டு சல்மான் ருஷ்டியின் துருக்கி மொழி பெயர்ப்பாளரை குறி வைத்து ஓட்டல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.   அந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

 1999 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களால் டெல்லியில் கடும் பெரும் போராட்டம் நடந்தது.  2016 ஆம் ஆண்டில்  சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.   இதை அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கு நியூயார்கில்  நடந்த இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அவரது பங்களாவும் தாக்குதலுக்கு உண்டாகி இருக்கிறது.