சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் : நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்..

 
sonia

சோனியா காந்திக்கு டெல்லி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதன் எதிரொலியாக,   நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவுசெய்துள்ளது.  

ராகுல், சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கை தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு  ஆஜராகுமாறு  ஏற்கனவே  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதனையடுத்து சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியது. இதனிடையே ராகுல் காந்தி 5 நாட்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிரியங்கா, ராகுல்,சோனியா

 இந்த நிலையில் மீண்டும் வருகிற  21ந் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து டெல்லியில்  நேற்று  நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  அதில் அமலாக்கத்துறை விசாரணைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  மத்திய  பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதனுடன்  18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பை  காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும்  காங்கிரஸ் நிர்வாகிகள் கூறப்பட்டுள்ளது.