நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

 
herald

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

sonia gandhi

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.