3வது நாளாக விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவு..

 
sonia gandhi

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி இன்று 3வது நாளாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.  

காங்கிரஸ்  கட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு காலத்தில்  நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்  தொடங்கப்பட்டது.  இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கு தாரர்களாக  கொண்டிருந்த இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி கடன் கொடுத்திருந்தது.  இதனை திருப்பிச் செலுத்தாத நிலையில்,  ஏற்பட்ட நஷ்டம் காரணமாக  இந்த பத்திரிகை  கடந்த 2008 ஆம் ஆண்டு  நிறுத்தப்பட்டது.
sonia gandhi

பின்னர் இந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்களை சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வெறும் ரூ. 50 லட்சத்திற்கு  மாற்றப்பட்டது.  ஆனால் இதற்கு  அசோசியேட்டட் ஜெனரல்ஸ் நிறுவன  ( ஏஜெஎல்)  பங்குதாரர்களின் ஒப்புதலை பெறவில்லை. இதனையடுத்து  கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டதாக பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
 

sonia gandhi
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ஏற்கனவே ராகுல் காந்தியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. அப்போது தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  

இதனைத்தொடர்ந்து சோனியா காந்தியும் அமலாக்கத்துறை முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக  ஆஜராகியிருந்தார். முதல் நாளில் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணைக்கு எதிராகவும், காங்ஃப்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்துன்2 வது நாளாக நேற்றும் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். இந்நிலையில் இன்று 3 வது நாளாக சோனியா காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி  அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.