சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்... நிவாரண தொகையை தூக்கியெறிந்த பெண்ணால் பரபரப்பு..

 
 சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்... நிவாரண தொகையை தூக்கியெறிந்த பெண்ணால் பரபரப்பு..

கர்நாடகாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட  இஸ்லாமியப் பெண்ணுக்கு சித்தராமையா ரூ. 2 லட்சம்  நிவாரண நிதி வழங்கியபோது, அதனை அந்தபெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கடந்த 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் கெரூர் பகுதிகளில் பெண்ணை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட போது, பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது.  இதில் பலர் காயமடைந்தனர்.  பாகல்கோர்  மாவட்டம் பதாமி தொகுதி, முன்னாள் முதலமைச்சருமான   சித்தராமையா, இன்று தனது  தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.   அப்போது மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.  மேலும் மத கலவரத்தில் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் இரண்டு லட்சத்தை அவர் வழங்கினார். ஆனால் அவர்கள் அதனை வாங்க மறுத்துவிட்டனர்.   

 சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்... நிவாரண தொகையை தூக்கியெறிந்த பெண்ணால் பரபரப்பு..

மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்களை பார்க்க மருத்துவமனைக்கு வந்த சித்தராமையா அவர்களது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அளிக்க முன்வந்தார்.  ராஜ்மா என்கிற இஸ்லாமிய பெண் பணத்தை கையில் பெற்றுக்கொண்டு எங்களுக்கு பணம் தேவையில்லை, அமைதி தான் வேண்டும்,  பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டார்.  காரில் அமர்ந்தவாறே  அந்தப் பெண்ணின் கையை பிடித்து சித்தராமையா ஆறுதல் கூறினார்.. இருந்தபோதிலும் அவர் பணத்தை வாங்க முன்வரவில்லை.   உடனடியாக சித்தராமையா அங்கிருந்து புறப்படவே,  அவர் வாகனத்தின் மீது பின்னால் இருந்து அந்தப் பணத்தை வீசி எறிந்தார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்... நிவாரண தொகையை தூக்கியெறிந்த பெண்ணால் பரபரப்பு..

இதே மதக் கலவரத்தில் காயமடைந்த ஹிந்து இளைஞர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் சித்தராமையாவை சந்திக்க மறுத்து விட்டனர்.   அவர்களை சந்திக்க முயன்றும் கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற சித்தராமையாவுக்கு  தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது.