3 மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

 
election commision

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

election

சமீபத்தில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது அடுத்த கட்டமாக மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிகிறது என்பது கவனிக்கத்தக்கது.

election

இந்நிலையில்  3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா , திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள
நிலையில்  இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இன்று முதல் தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.