அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் பீதி

 
earth

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 10.31 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது. இதனால் அச்சமடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில், சரியாக 10.59 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இதேபோல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேரில் 253 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.