குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி

 
draupadi murmu

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றிப்பெற்றார். 

திரௌபதி முர்மூ: பாஜகவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - யார் இவர்? -  BBC News தமிழ்

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா - 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.