வருகிற 25ம் தேதி குடியரசு தலைவராக பதவியேற்கிறார் திரௌபதி முர்மு

 
draupadi murmu

வருகிற 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கிறார். 

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா - 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையி்ல், வருகிற 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கிறார். வருகிற 25ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.