முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு முன்னிலை

 
draupadi

குடியரசு தலைவர் தேர்தலில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை பெற்றுள்ளார். 

இந்தியாவின்  15வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனையடுத்து 16வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும்  , எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் நடைபெற்றது.  இதில், ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

draupadi

இந்நிலையில், திட்டமிட்டபடி நாடாளுமன்ற வளாகத்தில் முற்பகல் 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.  பதிவான 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில், திரௌபதி முர்மு 540 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹ 208 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தோதல் அலுவலா் பி.சி.மோடி அறிவித்துள்ளார். திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 3,78,000 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 1,45,000 என்றும், 15 எம்பிக்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.