ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நீங்கள் சேர விரும்புகிறீர்களா?.. குலாம் நபி ஆசாத்தை கிண்டலடித்த திக்விஜய சிங்

 
ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது, நீங்கள் சேர விரும்புகிறீர்களா? என்று குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த  குலாம் நபி ஆசாத் அண்மையில்  அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ஜனநாயக ஆசாத் என்ற புதிய கட்சியை தொடங்கினார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது முதல் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில், நான் காங்கிரஸில் இருந்து பிரிந்திருந்தாலும், அவர்களின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானவன் அல்ல.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

கட்சியின் அமைப்பு வலுவிழந்ததே இதற்கு காரணம். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குலாம் நபி ஆசாத் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் கிண்டல் செய்துள்ளார். திக்விஜய சிங் டிவிட்டரில், நன்றி சகோதரே. ஆனால் நீங்கள் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கான காரணம் அப்போது புரியவில்லை.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

உங்களுக்கு அனைத்தையும் கொடுத்த காங்கிரஸை விட்டு வெளியேறினீர்கள். நீங்கள் அதைச் சரியாக செய்யவில்லை. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது, நீங்கள் சேர விரும்புகிறீர்களா?. என பதிவு செய்துள்ளார்.