சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை இன்னும் காட்டவில்லை... மத்திய அரசை குற்றம் சாட்டிய திக்விஜய சிங்

 
சர்ஜிக்கல் ஸ்டிரைக்

இன்று வரை புல்வாமா தாக்குதல் தொடர்பான எந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் காட்டவில்லை என்று காங்கிரஸின் திக்விஜய சிங் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நிகழச்சி ஒன்றில் பேசுகையில், புல்வாமாவில் நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், வீரர்களை விமானம் மூலம் அனுப்ப  வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி ஏற்கவில்லை. எப்படி இப்படி ஒரு குளறுபடி ஏற்பட்டது?. இன்று வரை புல்வாமா தாக்குதல் தொடர்பான எந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் காட்டவில்லை. அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள் என தெரிவித்தார்.

மோடிக்கு பதில் சுஷ்மா சுவராஜை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும்.. திக்விஜய சிங்

2016 செப்டம்பர் 17ம் தேதியில் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அன்று இரவு அந்த பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக செப்டம்பர் 28ம் தேதி நள்ளிரவ தொடங்கி 29ம் தேதி அதிகாரை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த இந்திய ராணுவ சிறப்பு படை வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது அங்கு 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. 

பா.ஜ.க.

2019 பிப்ரவரி 14ம் தேதியன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்தரிபோராவில்-ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் வாகனங்கள் வரிசையான சென்றன. அப்போது  தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.