ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படும்... தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் பா.ஜ.க.வின் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், ராகுல் பாபா (ராகுல் காந்தி) தினமும், அவர்கள் (பா.ஜ.க.) கோயில் கட்டுவார்கள் ஆனால் கோயில் திறப்பு தேதியை சொல்லமாட்டார்கள் என்று சொல்வார். ராகுல் பாபா, திரிபுராவிலிருந்து நான் சொல்வதை கேளுங்க,  2024 ஜனவரி 1ம் தேதி ராமர் கோயில் பொதுமக்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என தெரிவித்தார். 

அமித் ஷா

2019 மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி அடிக்கடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவார்கள் ஆனால் திறப்பு தேதியை சொல்லமாட்டார்கள் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்து இருந்தார். அதனை நினைவில் வைத்திருந்து, ராகுல் காந்தியை அமித் ஷா வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ஒரு மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்தார்.