என் அலுவலகத்தில் மீண்டும் சி.பி.ஐ. சோதனை.. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா.. சி.பி.ஐ. மறுப்பு

 
டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக சுமார் 5 மாதங்களுக்கு முன்  டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நீடித்தது. இந்நிலையில் நேற்று டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

ஆம் ஆத்மி

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா டிவிட்டரில், இன்று மீண்டும் சி.பி.ஐ. எனது அலுலவகத்திற்கு வந்தது. அவர் (சி.பி.ஐ.) வரவேற்கப்படுகிறார். அவர்கள் என் வீட்டில் சோதனை நடத்தினர், என் அலுவலகத்தை சோதனை செய்தனர், எனது லாக்கரை சோதனை நடத்தினர், எனது கிராமத்தில் கூட விசாரணை நடத்தினர். எனக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எந்த தவறும் செய்யாததால் எதுவும் கண்டுபிடிக்கப்படாது. டெல்லியின் குழந்தைகளின் கல்விக்காக உண்மையாக உழைத்தேன் என பதிவு செய்துள்ளார்.

சி.பி.ஐ.

ஆனால் மணிஷ் சிசோடியா தகவலை சி.பி.ஐ. மறுத்துள்ளது. மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மணிஷ் சிசோடியாவுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் சி.பி.ஐ. சோதனையோ, தேடுதலோ நடத்தப்படவில்லை. சிஆர்பிசி நோட்டீஸின் பிரிவு 91ன் கீழ் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது ஒரு ஆவணத்தை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டது. தேவையான ஆவணங்களை சேகரிக்க சிசோடியாவின் அலுவலகத்துக்கு சி.பி.ஐ. குழு சென்றது என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.