காளி போஸ்டர் சர்ச்சை - லீனா மணிமேகலைக்கு சம்மன்

 
leena manimekalai

காளி ஆவண படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leena Manimekalai reveals threat messages: 'Film poster not crime. This is'  | Latest News India - Hindustan Times

செங்கடல், மாடத்தி போன்ற ஆவண திரைப்படங்கள் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அந்த வகையில் இவர் ஜூலை 2ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து கடவுளான காளி ஒரு கையில் எல்ஜிபிடி கொடியும் மற்றொரு கையில் சிகிரெட்டுடன் நிற்பது போல "காளி" எனும் ஆவண திரைப்பட போஸ்டரை வெளியிட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் "Arrest Leena Manimegalai" என பதிவு செய்ய தொடங்கினர். 

இதில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்  கௌரவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்றைய தினம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரன வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ், இந்து கடவுளை கூற முடியாத அளவிற்கு லீனா மணிமேகலை சித்தரித்து உள்ளதாகவும் படத்தின் போஸ்டரில் கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றார். மேலும் இவை இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வாதத்தை முன் வைத்தார். அப்போது நீதிபதி அபிஷேக் குமார்   வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு காளி திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.