குஜராத்தில் கள்ளச்சாராயம் - பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

 
tn

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

tn

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய மோகம் அதிகரித்துள்ளது.  இந்த சூழலில் அகமதாபாத் மாவட்டம் போட்டட் மாவட்டங்களில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  கள்ள சாராயம் அருந்திய பலர் நேற்று மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 18 பேர் உயிரிழந்தனர்.  அத்துடன் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

death
இந்நிலையில் குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக கள்ள சாராயம்  தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், கள்ள சாராயத்தை விற்றவர் ஆகியோர் உட்பட 5  பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில்,  பூரண மதுவிலக்கு நடைமுறை சிக்கல்கள் கொண்டது என்று எதிர் கட்சிகள் கூறி வருகின்றன.