ராகுலுக்கு கொலை மிரட்டல் - இரண்டு பேர் கைது

 
r

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்  கடிதம் அனுப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை பிடிக்க போலீசார் தேடி  வருகின்றனர்.

 மராட்டியத்தில் நடை பயணத்தின் போது இந்துத்துவா கொள்கை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்த போது பயத்தின் காரணமாக ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர்.  ஆங்கிலேயர் அரசுக்கு உதவினார் என்று குற்றம் சாட்டினார். 

rg

 ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக ,  சிவசேனா,  நவநிர்மான், சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.    வீர சாவர்க்கர் நாசிக்கிலுள்ள பசூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்.  அங்கு நேற்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது.  இதற்கு சிவசேனா,  நவநிர்மான் சேனா கட்சிகள் ஆதரவு தெரிவித்தன .  இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்தூர் நகரில் நவம்பர் 28 அன்று ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.   அங்கு குண்டு வெடிப்பு நிகழும் என்று மிரட்டல் கடிதம் கொடுத்த ரெண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அந்த கடிதத்தில் ராகுல் காந்தி,  மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இந்த கடிதம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் மேலும் மூன்று பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.