400 சரக்கு ரயில்கள் மூலம் நாள்தோறும் மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகம்.. - மத்திய அரசு திட்டம்..

 
400 சரக்கு ரயில்கள் மூலம் நாள்தோறும் மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகம்.. - மத்திய அரசு திட்டம்..

நிலக்கரி தட்டுப்பட்டால் பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக 400 சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  

அண்மைக்காலமாக பல்வேறு மாநிலங்களிலும் கடும் நிலக்கரி தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையிருப்பு வைத்திருக்க இயலாமல், மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி வருவது, மின் உற்பத்தி செய்வதுமாக நிலைமை சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் கோடைக்காலம் தொடங்கியதால் மின் தேவையும் அதிகரித்திருப்பதால்,  கிராமப்புறங்களில் மின் வெட்டு ஏற்படும் சூழலும் உருவாகியிருக்கிறது.  இதனையடுத்து நிலக்கரி தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாநிலங்களுக்கு கூடுதல் நிலக்கரியை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

“திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு தான்” – விஜயகாந்த் பகீர் அறிக்கை!

  இதற்காக மே மாதம் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் 753 பயணிகள் மற்றும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் சரக்கு ரயில்களை இயக்க வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,  அந்தவகையில் நேற்று ஒரு நாள் மட்டும் 42 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

400 சரக்கு ரயில்கள் மூலம் நாள்தோறும் மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகம்.. - மத்திய அரசு திட்டம்..

இதற்கு பதிலாக  நாள்தோறும்,  400 ரயில்கள் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ய மத்திய  அரசு முடிவு செய்துள்ளது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு, மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படாமல் தடுப்பதற்கு  பயணிகள் ரயில்களை ரத்து செய்வதை  தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.